மயிலாப்பூர் பட்டாசு கடைகளில் சுறுசுறுப்பாக நடைபெறும் பசுமை பட்டாசுகள் விற்பனை

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடைகள் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் தீபாவளி நெருங்கி வரும் வேளையில் கடைகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த வருடம் பட்டாசு கடைகளில் சுற்று சூழலை பாதிக்காத பசுமை பட்டாசை பெரும்பாலான கடைகளில் விற்றுவருகின்றனர். மயிலாப்பூர் ஆர்.கே மட சாலையில் கோவில் குளத்திற்கு எதிரே உள்ள சுபிக்ஷா பட்டாசு கடையில் இதற்கென தனிப்பிரிவை ஏற்படுத்தி விற்று வருகின்றனர். பசுமை பட்டாசு ரூபாய் 400 முதல் விற்கப்படுகிறது.

Verified by ExactMetrics