ஆர் ஏ புரத்தில் உள்ள அவர் லேடி ஆப் கைடன்ஸ் தேவாலயத்தின் செயின்ட் வின்சென்ட் டி பால் சொசைட்டி பிரிவு அவர்களின் சமூகத் தொண்டுப் பணியின் ஒரு பகுதியாக, தேவாலயத்தால் நிர்வகிக்கப்படும் பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்களின் குழுவிற்கு நிதியுதவி அளித்துள்ளது.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு ரூ.51,000 காசோலைகளை உறுப்பினர்கள் வழங்கினர். இந்தத் தொகை அவர்களின் பள்ளிக் கட்டணச் செலவை ஈடு செய்யும்.
உறுப்பினர்கள் வின்சென்ட், பிரவின், சந்திரபோஸ், அற்புதநாதன், ஜான் ஆகியோர் பயனாளிகளை சந்தித்து காசோலைகளை பங்குத்தந்தை அருட்தந்தை டி.அந்தோணிராஜ் மற்றும் பள்ளித் தலைமையாசிரியை ஜூலி ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2ம் தேதி வழங்கினர்,
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து, வாழ்க்கையில் உயரும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அறப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்