சுகாதார பணியாளர்கள் இளம்வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விதிமுறைகளுக்காக காத்திருப்பு.

ஜனவரி 3ம் தேதியான இன்று முதல் 13 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுகாதார நிலையத்தில் பணியில் இருந்தவர்களிடம் இன்று காலை இதுபற்றி கேட்டபோது அவர்கள் இதுவரை சிறியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சம்பந்தமாக எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர். மேலும் பெரியவர்களுக்கான இரண்டு வகை தடுப்பூசிகளும் இங்கு இருப்பில் உள்ளதாகவும், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை சுமார் 15 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.