மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் கோவையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு 90 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நோயாளியின் இதயம் மீட்கப்பட்டு சில மணிநேரங்களில் மாற்று அறுவை சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு உருவாக்கப்பட்ட பசுமை வழித்தடத்தின் வழியாக 15 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு உறுப்பு மாற்றப்பட்டது என்று மருத்துவமனையின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

உறுப்பு மாற்றம் 1.5 மணி நேரத்திற்குள் முடிந்தது.

கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் பணியாளர்கள் மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை பணியாளர்கள் இந்த போக்குவரத்தை தடையின்றி செய்து கொடுத்தனர் – தானமாக பெறப்பட்ட உறுப்பை கொண்டுவர பயண நேரத்தை குறைப்பது மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றியை கணிசமாக அதிகரிக்கிறது.

Verified by ExactMetrics