தமிழகத்தில் பருவமழை தொடங்கியதையடுத்து மயிலாப்பூரிலும் அவ்வப்பொழுது மழை பொழிந்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது தவிர சாலைகளில் சாய்ந்து வளர்ந்துள்ள மரங்கள் அவ்வப்போது சாலைகளில் விழுவதால் இது போன்ற மரங்களை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதாரணமாக செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள வி.சி கார்டன் சந்திப்பில் சாலை பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதேபோன்று நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே உள்ள லஸ் அவென்யூ தெருவில் மெட்ரோ வாட்டர் பணிக்கு குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டது ஆனால் பக்கவாட்டில் உள்ள மண் சரிவர மூடப்படவில்லை. இதன் காரணமாக சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
ஆர்.கே மட சாலை இராணி மெய்யம்மை பள்ளி அருகே உள்ள சாலையில் மழை பொழிந்தால் தண்ணீர் தேங்கும் விதம் உள்ளது. தெற்கு கால்வாய் சாலை அல்போன்சா விளையாட்டு மைதானம் எதிரே மழை அதிகமாக பொழிந்தால் சாலையில் தண்ணீர் அதிகம் தேங்குவதாகவும் இதை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகவும் இங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் பகுதிகளில் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தாலோ அல்லது சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் 1913 என்று எண்ணுக்கு அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…