நூற்றுக்கணக்கானோர் ‘தேர்’ இழுக்க ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று, மார்ச் 16 காலை, தேர் ஊர்வலம் நடந்தது – நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சுவாமியை ஏற்றிச் சென்ற தேரை அக்கம்பக்க வீதிகள் வழியாக இழுத்து சென்றனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ் பிரபு மற்றும் மதன் குமார்.