மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில் இது போன்ற மாநகராட்சி பள்ளிகள் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதை கையாள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
ஆழ்வார்பேட்டை மண்டலத்திலுள்ள பீமன்னபேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் ஒரே வளாகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவு இல்லை. அப்படியே இருந்தாலும் பயன்படுத்த ஏற்றதாக இல்லை.
மாணவர்களுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை பாட்டிலில் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துவர அறிவுறுத்துகின்றனர்.
மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களில் மதிய உணவருந்த போதுமான இடவசதி செய்து தரப்படவில்லை. எனவே மாணவர்கள் வகுப்பறையிலேயே மதிய உணவருந்துகின்றனர்.
மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் சமையல் கூடமும் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் சமைப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.
இந்த பள்ளியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு பார்வையிட்டு போதுமான உதவிகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் இது போன்ற தனியார் தொண்டுநிறுவனங்களிடமிருந்தும் உதவியை எதிர்பார்ப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…