டாக்டர் ரங்கா சாலையில், சில இடங்களில் தொடர்ந்து வெளியேறி வரும் நிலத்தடி நீர்.

டாக்டர் ரங்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹேமலதா வசிக்கிறார். கடந்த ஐந்து நாட்களாக கடைக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும், இவரது வளாகத்தில் ஏற்கனேவே கட்டப்பட்ட பெரிய டேங்கில் இருந்து தண்ணீர் நீண்ட இரண்டு குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்.

டாக்டர் ரங்கா சாலையில் நவம்பர் 7-ம் தேதி பெய்த மழையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் இந்த பரபரப்பான சாலையை ஒட்டியுள்ள இரண்டு சந்துகள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் பாதை ஒன்றில் சில நாட்களாக சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஆனால், ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்கு குடும்பங்களைப் போல, இந்த சாலையில் வசிப்பவர்கள் சிலர், தரையில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். மழைநீர் சேகரிப்பு கிணறுகளை மூழ்கடித்த வளாகங்களிலும் இது தெளிவாகக் காணப்பட்டது. இங்கு வசிக்கும் ஒருவர், இங்கே தரை மட்டத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் நீர்மட்டம் உள்ளது என்று கூறுகிறார்.

ஆனால், ஹேமலதா மற்றும் அவரது குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். ஏனெனில் அவர்களின் நிலம் தாழ்வானது என்பதாலும், தண்ணீர் தானாகவே வெளியேறாததாலும், சுமார் 8/9 அடி ஆழமுள்ள தொட்டியிலிருந்து பம்பிங் செய்யும் போது தண்ணீர் குறையாமல் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பதை உணர்ந்தனர்.

இங்கே நீர் மட்டம் அதிகளவு உயர்ந்து உள்ளதாக ஹேமலதா கூறுகிறார்.

இன்று, புதன்கிழமை இரண்டு குழாய்கள் சாலையில் தண்ணீரை வெளியேற்றுவதைக் காண முடிந்தது, அது கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

மேலும் எங்கள் குடியிருப்பில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எங்கள் மின் இணைப்புகள் அனைத்தும் தரைதளத்தில்தான் உள்ளது. என்கிறார் ஹேமலதா.

மழைநீர் சேகரிப்பு நிபுணர் சேகர் ராகவன் கூறுகையில், நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது, பருவமழை தொடர்ந்து பொழிந்தால் நீர் கசிவை யாரும் தடுக்க முடியாது. ஜனவரியில் இருந்தே நீர் மட்டம் குறைய ஆரம்பிக்கும், என்று அவர் மேலும் கூறுகிறார்.

<< மழைக்குப் பிறகு, உங்கள் வளாகத்திலும் தண்ணீர் ஊற்றுபோல் வருகிறதா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்>>

Verified by ExactMetrics