செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் இந்த வார இறுதியில், பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி.

பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி இன்று காலை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது.

சென்னை மாவட்ட கேரம் அசோசியேஷன் மற்றும் செயின்ட் பீட்ஸ் பள்ளி இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.

காலை 9.30 மணிக்கு தொடக்க விழாவும் மற்றும் போட்டிகள் இன்று காலை 9.45 மணிக்கும் தொடங்கும். இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும்.

Verified by ExactMetrics