நாரத கான சபாவில் கர்நாடக வாய்ப்பாட்டில் இடைநிலை, அட்வான்ஸ்டு படிப்புகள்

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் உள்ள சுவாமி ஹரிதாஸ் கிரி மியூசிக் ஸ்கூல் ஆஃப் கர்நாடக இசை வாய்ப்பாட்டில் மூன்று ஆண்டுகளுக்கான இடைநிலை மற்றும் உயர்நிலைப் படிப்புக்கு கர்நாடக இசை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பாடத்திட்டத்தை முடித்த பிறகு, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ.(இசை) பட்டப்படிப்பில் சேரத் தகுதியானவர்கள் என சபாவின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.

வார நாட்களில் மாலையில் வகுப்புகள் நடைபெறும். வயது வரம்பு 12 முதல் 35 வயது வரை. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5 வர்ணங்களை அறிந்திருக்க வேண்டும்.

ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் ஆர்.எஸ். ஜெயலட்சுமி, வித்வான் சி.ஆர்.வைத்தியநாதன் மற்றும் விதுஷி பத்மினி ரவி

விண்ணப்பங்கள் இப்போது சபா அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு சபா அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 2499 3201

Verified by ExactMetrics