மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் பகவான் மகாவீரரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவை கொண்டாடுகின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் ஒன்று கூடி பகவான் மகாவீரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள ஜெயின் ஸ்தானக் வளாகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

நாள் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. பின்னர் சமூக அடிப்படையிலான நிகழ்வுகள் – இந்த கோடைகாலத்திற்கான குடிநீர் பந்தல் திறப்பு, அன்னதானம் மற்றும் மோர் மற்றும் லட்டு விநியோகிக்கப்படவுள்ளது.

அன்று மதியம், சமூக நலத் திட்டங்களின் முறையான துவக்கம் இருக்கும்.

மயிலாப்பூர் அருண்டெல் தெருவில் உள்ள ஜாவன்ட்முல் சோர்டியா நோயறிதல் மையத்தில் ஆலோசனை பெறும் நபர்களுக்கு அன்றைய நாளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைக்கு இந்த சமூகம் நிதியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவிற்கு மரச்சாமான்கள் வழங்கப்பட உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வர்தமான் ஸ்வேதாம்பர் ஸ்தானக்வாசி ஜெயின் சங்கம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ எஸ்.எஸ். ஜெயின் யுவக் சங்கம் ஆகியவை இந்த நாட்களின் நிகழ்வை ஆதவளிக்கின்றன.

யுவக் சங்கத்தின் தலைவர் ஜி.சஞ்சய் சேத்தியா கூறுகையில், இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு என்றும், மயிலாப்பூரில் உள்ள சமூகம் இந்த நிகழ்வைக் கொண்டாட கைகோர்ப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் விவரங்களுக்கு சேத்தியாவின் தொலைபேசி எண் – 7010945847

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago