லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி முறைப்படி பொறுப்பேற்றார்.

மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார்.

அவரை வரவேற்கும் விதமாக காலை 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எளிமையான நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு பள்ளி நிர்வாகத்தின் முக்கியஸ்தராக இருக்கும் வத்சலா நாராயணசுவாமி, வயது முதிர்ந்த போதிலும், பள்ளியின் போர்டிகோவில் புதிய ஹெச்.எம்-ஐ வாழ்த்துவதற்காக வந்திருந்தார்.

பள்ளி இசைக்குழு மற்றும் மூத்த மாணவர்கள் புதிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றனர். பின்னர் புஷ்பவல்லி லைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் இருக்கையில் அமர்ந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற பி.ரூபி புத்தோட்டாவிடம் இருந்து அவர் பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.

Verified by ExactMetrics