லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி முறைப்படி பொறுப்பேற்றார்.

மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார்.

அவரை வரவேற்கும் விதமாக காலை 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எளிமையான நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு பள்ளி நிர்வாகத்தின் முக்கியஸ்தராக இருக்கும் வத்சலா நாராயணசுவாமி, வயது முதிர்ந்த போதிலும், பள்ளியின் போர்டிகோவில் புதிய ஹெச்.எம்-ஐ வாழ்த்துவதற்காக வந்திருந்தார்.

பள்ளி இசைக்குழு மற்றும் மூத்த மாணவர்கள் புதிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றனர். பின்னர் புஷ்பவல்லி லைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் இருக்கையில் அமர்ந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற பி.ரூபி புத்தோட்டாவிடம் இருந்து அவர் பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.

admin

Recent Posts

விண்ணை பிளந்த கோஷங்களுடன் நடைபெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் தேர் திருவிழா.

மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…

3 hours ago

தேர்தல் 2026: தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தா. வேலுவை மீண்டும் போட்டியிடத் தேர்வு செய்தது திமுக

மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…

3 hours ago

தேர்தல் 2026: மயிலாப்பூரில் போட்டியிடுகிறார் தவெக கட்சியின் பொருளாளர் பி. வெங்கட்ரமணன்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக,  கட்சியின் பொருளாளர் பி.…

8 hours ago

பங்குனித் திருவிழா தேரோட்டத்தை வரைவபவர்களின் சந்திப்பு – மார்ச் 29

மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…

2 days ago

இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.

இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…

2 days ago

சென்னை தொடக்கப்பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…

3 days ago