ஸ்ரீ அப்பர்சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள ஒரு சில கோவில்கள் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ அப்பர்சுவாமி கோவில், மின் விளக்குகளாலும், டஜன் கணக்கான மண் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவில் வளாகத்தில் சாமி ஊர்வலம் நடந்தது. பின்னர் சொக்க பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.