கேசவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வீதி உலா

ஆடி அமாவாசை மற்றும் ஆறாம் நாள் ஆடி பூரம் உற்சவத்தின் ஒரு பகுதியாக, கேசவப் பெருமாள் மற்றும் ஆண்டாள் இணைந்து வியாழன் (ஜூலை 28) மாலை 6 மணியளவில் நான்கு பெரிய வீதிகளை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.

இந்த வாரம் கேசவப் பெருமாள் கோயிலில் ஆடி பூரம் உற்சவம் ஆண்டாள் வாகன வீதி உலா நடந்தது.

கடந்த சனிக்கிழமை ஆண்டாள் கஜ லட்சுமி தரிசனத்துடன் உற்சவம் தொடங்கியது. புதன்கிழமை சேஷ வாகனத்தில் வீதி உலா வந்தார்.

சனிக்கிழமை மாலை, யானை வாகனத்தில் தரிசனம் தருவார், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆண்டாள் தேர் ஊர்வலம் நடைபெறும்.

ஆடி பூரம் ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை வருகிறது.

செய்தி, புகைப்படம்; எஸ்.பிரபு

Verified by ExactMetrics