கேசவப் பெருமாள் கோயிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் மயூரவல்லி தாயாரின் வாகன ஊர்வலம் நடைபெறும்.
செப்டம்பர் 27ல் சேஷ வாகன ஊர்வலம், செப்டம்பர் 30ல் கண்ணாடி பல்லக்கு, அக்டோபர் 1ல் கிளி வாகனம் உள்ளிட்டவை ஊர்வலத்தின் சிறப்பம்சங்கள்.
அக்டோபர் 4ல், கேசவ பெருமாள், மயூரவல்லி தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது. விஜயதசமியை முன்னிட்டு (அக்டோபர் 5ல்) கேசவ பெருமாள் குதிரை வாகனத்தில் நான்கு வீதிகளை வலம் வருவார்.
நவராத்திரி உற்சவம் செப்டம்பர் 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
செய்தி: எஸ்.பிரபு