ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு. காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீதிகளில் வாகனங்கள் மூலம் விற்க அரசு அனுமதி

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை தெருக்களில் வண்டிகள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய தேவைகளான உள்ளாடைகள், மற்றும் குழந்தைகளுக்கான துணிகள் போன்றவற்றை வாங்குவதில் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதே நேரத்தில் தெருக்களில் இதுபோன்ற துணிகள் விற்கும் கடைகளில் அவர்களுடைய தொலைபேசி எண்ணை போஸ்டராக ஒட்டியுள்ளனர். அவர்களை தொடர்புகொண்டு இதுபோன்ற உதவிகளை பெறுவதற்கு இந்த போஸ்டரை கடை கதவுகளில் ஒட்டியுள்ளனர். ஆனால் இந்த உதவிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது தெரியவில்லை.