மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையமான ராணி மேரி கல்லூரிக்கு உயர்மட்ட பாதுகாப்பு.

சென்னை வடக்கு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மெரினாவில் உள்ள ராணி மேரி கல்லூரியில் உள்ள நீண்ட அறைகளில் உயர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன், தொகுதியின் சீல் வைக்கப்பட்ட அனைத்து EVMSகளும் இந்த வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டு, இதற்காகத் ஏற்படுத்தப்பட்ட ஒரு சில அறைகளில் வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டன. அன்றிலிருந்து, மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படைகள் இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு டஜன்கணக்கான கேமராக்கள் பொருத்தப்பட்டு, வேட்பாளர்கள் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இங்கு உள்ளனர்.

கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் வெளியாட்களுக்கு கல்லூரி வளாகத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics