வெள்ளீஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானும், சிவகாமியும் மாட வீதியில் உலா

கபாலீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை மாலை பஞ்ச மூர்த்திகள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு வெள்ளீஸ்வரர் கோயிலின் நடராஜர் மற்றும் சிவகாமி மாட வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

தற்செயலாக, கிழக்கு மாட தெருவில் உள்ள தேரடி அருகே, கபாலீஸ்வரர் மற்றும் வெள்ளீஸ்வரர் கோவிலின் நடராஜர் மற்றும் சிவகாமியின் சுவாமி ஊர்வலங்கள் 9 மணியளவில் சந்தித்துக்கொண்டது.

வார இறுதியில் மயிலாப்பூரில் மீண்டும் சுவாமிகள் வீதி உலா வந்தது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Verified by ExactMetrics