மாட வீதியில் காலை நேரத்தில் பாராம்பரிய உணவான கூழ் விற்பனை

மயிலாப்பூரின் மூலைகளிலும் தெரு முனைகளிலும், வியாபாரிகள் இப்போது தாகத்துடன் இருக்கும் மக்களுக்கு கோடையை சமாளிக்க ஏதாவது ஒரு உணவை விற்பனை செய்கின்றனர்.

அந்த வகையில் சமீப நாட்களில், தெற்கு மாட வீதியில், வியாபாரி ஒருவர் தினமும் காலை, 7 மணி அளவில் ‘கூழ்’ வழங்குவதைக் காணலாம்.

அவர் வழங்கும் கூழ் ராகி, சோளம் மற்றும் கம்பு (தினை) ஆகியவற்றின் கலவையால் ஆனது. இந்த கூழ் வாழை இலையில் வைக்கப்படும் பாத்திரத்தில் வழங்கப்படுகிறது, மேலும் இதனுடன் ஒருவித சட்னி மற்றும் ஊறுகாயும் வழங்கப்படுகிறது.

இதன் விலை 25 ரூபாய்.

தினமும் காலையில் எழுந்து வீட்டில் கூழ் தயார் செய்வதாக வியாபாரி கூறுகிறார்.