தியாகராஜபுரம் மாதவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று மற்றும் அடுத்தடுத்த ஊரடங்கு காரணமாக விழா பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் நடைபெறவில்லை. இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் வழக்கம் போல நடைபெறவுள்ளது.
பத்து நாள் பிரம்மோற்சவம் ஏப்ரல் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல். 26) காலை 6 மணிக்கு கருட வாகனத்தில் மாதப் பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சனிக்கிழமை (ஏப்ரல். 30) காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தேர் ஊர்வலம் தொடங்கும்.
மே 1-ஆம் தேதி மாலை குதிரை வாகனம் மற்றும் வேடு பரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை ஊர்வலம் காலை 7.30 மணிக்கும், மாலை வாகன ஊர்வலம் இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.
செய்தி: பிரபு