ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் சுகாதார மையத்தில் டீனேஜ் வயதினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

கொரோனா தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க வேண்டுமா? ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார மையத்தில் நீங்கள் போட்டுக்கொள்ளலாம்.

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வடிவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இங்கே நாள் முழுவதும் காலை 10 மணி முதல் கிடைக்கும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுக்க உங்கள் முந்தைய தடுப்பூசி செலுத்திய குறிப்பு விவரங்களை எடுத்து வர வேண்டும்.

மேலும், டீனேஜர்ஸ் / இளம் வயதினர்களுக்கான தடுப்பூசி இங்கே வழங்கப்படுகிறது.

இரண்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சுகாதார மையம் ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ளது. (மேம்பாலத்தின் தெற்கு பக்கத்தில், வின்னர்ஸ் பேக்கரிக்கு அருகில்).

Verified by ExactMetrics