மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது. இதற்கு பெரும்பாலும் அருகிலுள்ள வீடுகளில் உள்ள போர்வெல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மயிலாப்பூர் ஸ்ரீ மாதவப்பெருமாள் கோவிலின் குளத்தில் மழை நீரை அதிக நாட்கள் தேக்கிவைக்கும் பொருட்டு தமிழக அரசும் மற்றும் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜும் சேர்ந்து குளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இப்போது குளத்தில் அடிப்பகுதியில் உள்ள சேற்றை அகற்றிவிட்டு காஞ்சிபுரத்திலிருந்து லாரிகளில் மண்ணை கொண்டு வந்து நிரப்பவுள்ளனர். இந்த மண் குளத்தில் தண்ணீரை கொஞ்ச நாட்கள் தேக்கிவைக்கும் என்பதால் இந்த பணியை செய்வதாக தெரிவிக்கின்றனர்.