ஜெத் நகரில் வசிக்கும் மக்கள் குப்பைகளை அகற்ற முகாம் நடத்தினர்.

மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம் குப்பைகளை அகற்றும் அர்பேசர் சுமீத் நிறுவனத்துடன் சேர்ந்து நடத்தப்பட்டது. இந்த பகுதியில் இருக்கும் டாக்ஸி ஓட்டுநர் சங்கமும் இவர்களுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சாலைகளில் குப்பைகளை போடவேண்டாம் என்றும், அதே நேரத்தில், தெருவோரம் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் குப்பை போடாமல் அர்பேசர் சுமீத் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டருகே வரும் போது அவர்களிடம் குப்பைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த பகுதியில் இப்போது தெருவோரம் உள்ள குப்பை போடும் குப்பை தொட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.

Verified by ExactMetrics