ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் டிசம்பர் 29ம் தேதி நடராஜர் உற்சவம் நடைபெறவுள்ளது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் 29ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி 30ம் தேதி காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 30ம் தேதி காலை 5 மணியளவில் நடராஜருக்கு பெரிய அளவில் தீபாராதனை நடைபெறவுள்ளது. ஆனால் இந்த உற்சவத்தில் பங்குபெற பொதுமக்களுக்கு அனுமதி அளிப்பது சம்பந்தமான தகவல் இல்லை. மேலும் பக்கதர்களை குறைந்த அளவில் இந்த உற்சவத்திற்கு அனுமதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கோவில் சிவாச்சாரியார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.