மெட்ராஸ் டே 2022: ஆகஸ்ட் 14ல் வட சென்னை ஹெரிடேஜ் டூர்.

மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியர்-வெளியீட்டாளர் வின்சென்ட் டி’சோசா, மெட்ராஸ் டே 2022 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘Sunken Villages of North Madras’ என்ற கருப்பொருளில் ஹெரிடேஜ் சுற்றுப்பயணத்தை நடத்துகிறார். இது ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் பங்கேற்பாளர்களை லஸ்ஸில் உள்ள மயிலாப்பூர் கிளப்புக்கு வெளியே, இருக்கும் ஒரு வேனில் ஏற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் 14 காலை. (ஞாயிற்றுக்கிழமை) வட சென்னைவாசிகள் மற்றும் கலைஞர்கள், மணவாளன் மற்றும் ஜோதி, வின்சென்ட் டி’சோசாவுடன் இணைந்து வேன் மற்றும் நடைப்பயணம் மூலமாக , இப்போது தண்ணீருக்கு அடியில் இருக்கும் காசிமேட்டுக்கு வடக்கே உள்ள காலனி பகுதிகளில் இந்த சுற்றுப்பயணத்தை நடத்துகிறார்கள்: 1970களில் இங்கிருந்த மக்களின் வாழ்க்கை மற்றும் காலனிகள் இருந்த காலத்தின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பதிவு செய்வது எப்படி:

ஒரு நபருக்கு ரூ.250 செலுத்தி வேனில் உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யுங்கள். (வங்கி விவரங்கள் கீழே உள்ளது) மற்றும் 9841049155 இந்த எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை வாட்சப் செய்யவும். முன்பதிவு ஆகஸ்ட் 12 காலை 9 மணிக்கு முடிவடைகிறது. முதலில் வரும் 25 நபர்களுக்கு மட்டுமே ஒரே பிக்கப் பாயின்ட் காலை 6.30 மணிக்கு மயிலாப்பூர் கிளப்பின் வெளியே, லஸ் சர்ச் ரோடு. (இங்கே பொது பார்க்கிங் இடம் உள்ளது).

காலை 7 மணிக்கு ராயபுரத்தில் பயணம் தொடங்குகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு. வேன் மீண்டும் லஸ்ஸுக்கு வரும்.

வங்கி தகவல் :
அக்கௌன்ட் பெயர் – மெட்ராஸ் டே.
இந்தியன் வங்கி, அபிராமபுரம்.
அக்கௌன்ட் எண்; 707815354.
IFSC குறியீடு: IDIB 000A092.
அனைத்து மெட்ராஸ் டே நிகழ்வுகள் பற்றிய அனைத்து தகவல்களும் www.themadrasday.in வலைதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Verified by ExactMetrics