மாலா வெங்கடகிருஷ்ணன் அம்மனுக்கு ஸ்பெஷல் நோம்பு அலங்காரம்

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் மாலா வெங்கடகிருஷ்ணன் என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக வரலட்சுமி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் நோம்பு அலங்காரம் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு, செஸ் ஒலிம்பியாடைக் குறிக்கும் வகையில், செஸ் போர்டு தீம் மூலம் அம்மனுக்கு ஆடை வாழை இலையை பயன்படுத்தி நெய்து அணிவிக்கத் தேர்வு செய்ததாக அவர் கூறுகிறார்.

மாலா, முன்பு மாண்டிசோரி ஆசிரியையாக இருந்தவர்.

கிராஃப்ட் என்பது இவரது ஆர்வம், மற்றும் இந்த ஆண்டு வித்தியாசமான நவராத்திரி கொலுவுக்கு தயாராகி வருவதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு: mala.nive@gmail.com