ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து சேவைகளை வழங்கி வந்தனர். தற்போது இந்த துணை தபால் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கி வருவதாக போஸ்ட் மாஸ்டர் சத்யபாமா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஒரு மாதத்தில் தபால் நிலையத்தில் சுமார் முந்நூறு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும் ஊரடங்கு நேரத்தில் தபால் சேவைகள் கூட சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு சரிந்தது என்றும் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால் ஊரடங்கு நேரத்தில் மருந்து பார்சல்கள் அதிகம் வந்தது. தற்போது மக்கள் இந்த தபால் நிலையத்திற்கு தங்களுடைய அக்கௌன்ட் சேவைகளை புதுப்பிக்கவும் மற்ற வேலைகளுக்காகவும் வரத்தொடங்கியுள்ளதால் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளது.
இந்த தபால் நிலையத்திற்கு நவம்பர் 2020ல் புதியகட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே அனைத்து சேவைகளும் கிடைக்கும். மாலை 5.30 வரை திறந்திருந்தாலும் இந்த நேரத்தில் ஸ்டாம்ப் மட்டுமே விற்கப்படும்.