இந்த இளைஞர் புத்திசாலி. தெரு நாய்கள் மற்றும் பறவைகளின் தாகத்தை தணிக்க உதவினார்.

மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட செல்லும்போது அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் கூட கவனிக்காத ஒரு விஷயத்தைக் கண்டார்.

தெருவில் சுற்றி திரியும் விலங்குகள், பறவைகள் தாகத்தை தணிக்க இந்த கோடையில் தெரு மூலைகளில் ப்ளூ கிராஸ் வைத்திருந்த பீங்கான் நீர் கிண்ணத்தை அவர் கவனித்தார்.

சமீபத்தில், தேஜஸ் கிண்ணத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே தெருவில் கட்டிட வேலை செய்யும் ஒரு மேஸ்திரியிடம் இதே போன்று சிமென்டில் செய்து தருமாறு கேட்டார் அந்த மேஸ்திரியும் இந்த சேவைக்கு ஒப்புக்கொண்டு இலவசமாக செய்து கொடுத்தார்.

இளைஞர் தேஜஸ் செய்த காரியம், மற்ற இளைஞர்களும் சேவை செய்ய ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

<<செய்தி மற்றும் படம் பாஸ்கர் சேஷாத்ரி>>

Verified by ExactMetrics