புத்தாண்டு தினத்தில் மயிலாப்பூரில் மார்கழி வீதி உலா

மயிலாப்பூர் ட்ரையோ தலைமையிலான ஸ்ரீ சுமுகி ராஜசேகரன் நினைவு அறக்கட்டளை மற்றும் அதன் உறுப்பினர்கள் மயிலாப்பூரில் ஆண்டுதோறும் மார்கழி வீதி உலாவை நடத்துவார்கள். அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டின் மார்கழி வீதி உலா ஜனவரி முதல் நாளில் நடத்துகிறார்கள்.

இந்த ஊர்வலத்தில் சேரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காலை 6.30 மணி முதல் தேரடியில் தொடங்கி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் உலா வரும்போது, சமய, கலாசாரம் சார்ந்த கதைகளை கேட்க முடியும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9382698811.