சென்னை தெற்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மயிலாப்பூரில் ‘நன்றி’ சொல்ல சுற்றுப்பயணம்.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூரில் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இன்று புதன்கிழமை (ஜூன் 19) காலை திறந்தவெளி ஜீப்பில் நின்று கொண்டு, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு மற்றும் கட்சியின் உள்ளூர் பிரிவு மூத்த தலைவர்களுடன், எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மயிலாப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு நகர்களின் உள் வீதிகளில் சுற்றி வந்து ‘நன்றி’ கூறினார்.

தமிழச்சி சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் 2019-ல் பெற்ற வாக்குகளில் இருந்து குறைந்தாலும் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்குப் பெரும் வாக்குகள் சோழிங்கநல்லூர் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற மண்டலங்களில் கிடைத்தது. மயிலாப்பூர் மண்டலத்தில் குறைந்த வாக்குகள் கிடைத்தது.

Verified by ExactMetrics