ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சேகர் பாபுவுடன் இணைந்து மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலுவும் நவராத்திரி விழாவின் அடையாளமாக அம்பாளை வண்ணப் பல்லக்கில் ஏற்றி கோவிலுக்குள் ஊர்வலம் வந்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி சமய-கலாச்சார நிகழ்ச்சிகளின் தொடர் இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நவராத்திரி கொலுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பற்றிருந்தது, அந்தி வேளையைக் கடந்ததும் கோயில் பிரகாசமான, வண்ணமயமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. மாலையில் மழை பெய்தாலும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.