மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வாரயிறுதியில் மீன்களுக்கு அதிக கிராக்கி உள்ளதால் தாங்கள் வியாபாரத்தை இழக்க முடியாது என்று பெண் வியாபாரிகள் மத்தியில் கோபம் அதிகமாகியது, இதன் காரணமாக ரோட்டின் வடக்கு முனையில் சனிக்கிழமை காலை வேலு நேரில் சென்றார்.

அன்று காலை, ஆண்கள் மற்றும் பெண் வியாபாரிகள் மீன்களை சாலையோரத்தில் பரப்பினர், மேலும் எம்.எல்.ஏ மற்றும் அவரது குழுவினர் அவர்களை அன்றைக்கு நடைபாதையோரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர் மற்றும் உள்ளூர் போலீசாரை வலுக்கட்டாயமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் மேற்குப் பகுதியில் உள்ள கடைகளை அகற்றினர், மேலும் இங்கு நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பங்க்கள் மற்றும் குடிசைகளும் இதில் அடங்கும்.

நவீன மீன் சந்தை அமைக்கப்பட்டு ஆறு மாதங்களில் இங்கு சாலை அமைக்கப்படும், மேலும் அனைத்து வியாபாரிகளும் இங்கு தங்குவதற்கு இடமளிக்கப்படும். என்று கூறுகிறார் எம்.எல்.ஏ

சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் முன்பு, பெருநகர சென்னை மாநகராட்சியிடம் சாலையில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் அகற்றி, ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் நடவடிக்கையை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.

Verified by ExactMetrics