பருவமழை 2022: கோயில் குளத்தில் அதிகளவு பாயும் மழைநீர்

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தில் மழைநீர் பாய்ந்தோடுவது பருவமழையின் தொடக்கத்தில் ஒரு சாதகமான நிகழ்வாக உள்ளது.

இன்று காலை, லேசான மற்றும் சீரான மழை பெய்தாலும், சில நேரங்களில் பலத்த மழை பெய்தாலும், வடிகால்களில் இருந்து குளத்தின் படிகளுக்கு செல்லும் குழாய்களில் இருந்து மழைநீர் பெருமளவில் வெளியேறுவதைக் பார்க்கமுடிந்தது.

குளத்தில் நிரம்பிய மழைநீரை எடுத்துச் செல்ல வடிகால் மற்றும் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

சில காலத்திற்கு முன்பு, பெய்த மழையின் அனுபவத்தை வைத்து , கோவில் குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தெருவில் தொடர் நீர் வடிகால் மற்றும் கடைமடைகள் அமைக்கப்பட்டன.

Verified by ExactMetrics