பருவமழை 2023: நான்கு பக்கங்களிலிருந்தும் சித்திரகுளத்திற்கு மழைநீர் வருவதால் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள குளத்தில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதைப் போலவே சித்திரகுளத்திலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பலத்த மழை பெய்ததால், இக்குளத்திற்கு தண்ணீர் வருகிறது.

நவம்பர் 15ம் தேதி நிலவரப்படி, குளத்தின் ஒருபுறம், தண்ணீருக்கு மேலே நான்கு நிலைகள் மேல் படிகள் மட்டுமே காணப்பட்டன.

குளத்தையொட்டியுள்ள தெருக்களில் விழும் தண்ணீரால் மழைநீர் நான்கு பக்கங்களிலிருந்தும் பாய்ந்து வருகிறது.

ஆர்.நடராஜ் மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, குடிமராமத்து பணியை கண்காணித்து தெரு ஓரங்களில் இருந்து குளத்திற்குள் நுழைவாயில்களை உருவாக்கினார், இதன்காரணமாக தற்போது தண்ணீர் இயல்பாக செல்கிறது.

குளத்தில் நிறைய மீன்கள் காணப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல வியாபாரிகள் அதில் கழிவுகளை வீசி தண்ணீரை மாசுபடுத்துவது தொடர்கிறது.

உங்கள் காலனியில் தீவிரமான பருவமழை சம்பந்தமான சிக்கல்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளவும். மின்னஞ்சல் முகவரி – mytimesedit@gmail.com

Verified by ExactMetrics