பருவமழை: மழை பெய்யும் போதெல்லாம் டாக்டர் ரங்கா லேன் பகுதியில் சிரமத்தை அனுபவிக்கும் மக்கள்

மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் அமைந்துள்ள டாக்டர் ரங்கா லேனில் வசிக்கும் மக்கள் ‘எங்கள் பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்குகிறது.’ என்று கூறுகின்றனர்.

சில வருடங்களாக இப்பிரச்னை இருந்து வருவதாகவும், இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஜி.சி.சி., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என, குடியிருப்பாளர் முருகேசன் கூறுகிறார்.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு எடுக்கப்பட்டது.

 

Verified by ExactMetrics