சமூகம்

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றனர். காலனி பகுதிகளிலும் அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்களுடன் இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இதுவரை 45 வயதிற்கு மேற்பட்டோருக்கே பெரும்பாலும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளனர். ஆனால் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக சீனிவாசபுரத்தில் கடந்த ஆறு மாதங்களில் இங்கு வசித்து வரும் மக்களில் சுமார் ஐம்பது நபர்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

மேலும் தடுப்பூசி போடுவதில் இங்கு வசித்து வரும் மக்களுக்கு பல்வேறு கேள்விகள் இருந்தாலும் அவர்களுக்கு சரியான ஆலோசனைகள் வழங்கி தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். இது பற்றி மயிலாப்பூர் எம்.எல்.ஏ விடம் கேட்ட போது இது ஒரு சவாலான காரியம் என்று கூறினார். இந்த பகுதிகளில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் இங்குள்ள உள்ளூர் அரசியல் கட்சியினர் யாரும் இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை என்று தெரிவிக்கின்றனர். ஒரு சில இடங்களில் காய்கறி வண்டிகள் வரும் போது மக்கள் நெருக்கமாக சென்று காய்கறி வாங்குகின்றனர். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கோவிட் கேர் பணியாளர்கள் மக்களிடம் அறிவுறுத்தினால் இங்குள்ள அரசியல் கட்சியினர் இந்த வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அரசும், அரசியல் கட்சியினரும் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…

1 day ago

லூப் ரோட்டின் கடைசியில் மீன் சந்தை மற்றும் கடல் உணவு வளாகத்தை நிறுவ ஜிசிசி திட்டம்

சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…

2 days ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை

ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…

3 days ago

மாநகராட்சி துப்புரவு அமைப்பு வடக்கு சித்திரகுளம் தெருவை சுத்தமாக்கியது.

சித்திரகுளம் வடக்கு வீதி இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி உள்ளூர் பொறியாளர் தலைமையில் துப்புரவுப் பணி நடந்தது. இது…

3 days ago

இலவச பல் பரிசோதனை முகாம். நவம்பர் 18 முதல் 22 வரை

ஆர் ஏ புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா வளாகத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை…

4 days ago

பருவமழை 2024: கோயில் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் மண்டலத்தில் மழை பெய்யும் போது நின்று உற்று நோக்கும் நல்ல இடங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள்.…

7 days ago