வாயிலார் நாயனாரின் முக்தி தினம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் அபிஷேகம், அதே போல் இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வாயிலார் நாயன்மார் மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது.

கடந்த முப்பது வருடங்களாக இந்த விழாவினை 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட பூந்தமல்லி உயிர் துளுவ வேளாள மரபினர் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இந்த சங்கத்தினர் விழா பற்றி கூறும்போது அவர்களின் மூதாதையர்கள் கபாலீஸ்வரர் கோவிலில் நூறு வருடங்களுக்கு மேலாக கோவில் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்ததாகவும் தற்போதும் அந்த தொடர்பு இருப்பதாகவும் எனவே இந்த வாயிலார் நாயன்மார் விழாவினை வருடந்தோறும் கொண்டாடுவதாகவும் தெரிவித்தனர்.

இன்று மாலை நாயனாரின் புஷ்ப பல்லக்கு சேவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறவுள்ளது. வழக்கமாக இந்த புஷ்ப பல்லக்கு சேவை கோவிலுக்கு வெளியே மிகவும் சிறப்பாக நடைபெறும். தற்போது ஊரடங்கு விதிமுறைகளால் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது.

 

Verified by ExactMetrics