கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கச்சேரிகள் மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி பாரதிய வித்யா பவனில் தியாகராஜா ஆராதனை விழாவை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. இது பாரதிய வித்யா பவனின் முதல் லைவ் கச்சேரி ஆகும். ரசிகர்களும் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு பிறகு ராக சுதா அரங்கில் மூத்த கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் விஜய் சிவாவின் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரிக்கு நிறைய இசை ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் வந்தவர்களிடம் அவர்களுடைய முகவரிகள் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர்ந்து கச்சேரிகளை கண்டு ரசித்தனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சாபாவின் இந்த மாத கச்சேரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கச்சேரிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்பவர்கள் முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது நடைபெறும் கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…
மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…