ஊரடங்கிற்கு பிறகு கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் சபா அரங்குகளில் வழக்கம் போல் நடைபெற தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கச்சேரிகள் மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, இதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2ம் தேதி பாரதிய வித்யா பவனில் தியாகராஜா ஆராதனை விழாவை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. இது பாரதிய வித்யா பவனின் முதல் லைவ் கச்சேரி ஆகும். ரசிகர்களும் குறிப்பிட்ட அளவில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு பிறகு ராக சுதா அரங்கில் மூத்த கர்நாடக வாய்ப்பாட்டு கலைஞர் விஜய் சிவாவின் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரிக்கு நிறைய இசை ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் வந்தவர்களிடம் அவர்களுடைய முகவரிகள் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளில் அமர்ந்து கச்சேரிகளை கண்டு ரசித்தனர்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சாபாவின் இந்த மாத கச்சேரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கச்சேரிகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்பவர்கள் முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது நடைபெறும் கர்நாடக இசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் தடை ஏதும் இல்லாமல் பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Verified by ExactMetrics