பள்ளிகள், கல்லூரிகளில் மேலும் சில வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலும் சில வகுப்புகள் அரசின் ஆணைக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 9 மற்றும் 11 வகுப்பு தொடங்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகை பதிவு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் வர இருப்பதால் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு வந்தால் நல்லது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம் இல்லாமல் வந்த மாணவிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.

இராணி மேரி கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவிகளை வரிசையில் நிற்க செய்து முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.

Verified by ExactMetrics