சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா சூழலை அடுத்து சென்னை முழுவதும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு கிலோமீட்டருக்குள் இந்த புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் தற்போது நானூறுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளள நிலையில் தற்போது மேலும் பல வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த புதிய வாக்குச்சாவடிகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த புதிய வாக்குச்சாவடிகள் விவரங்களை பொதுமக்களிடையே தெரியப்படுத்த தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெகு விரைவில் தொடங்கவுள்ளது.