
முத்துராமன் தெரு குடியிருப்போர் சங்கத்தினர், கடந்த வார இறுதியில் அப்பகுதியின் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவித்தனர்.
அப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை, மயிலாப்பூர் பி. எஸ். மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், முத்துராமன் தெரு குடியிருப்போர் சங்கத்தின் தலைவருமான ரகுவீரன் மற்றும் அச்சங்கத்தின் செயலாளர் எஸ். கணேஷ் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
இந்தத் தெரு மந்தைவெளி தெருவுக்கு அருகில் அமைந்துள்ளது.




