சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா துவங்கியது. ஜனவரி 4 முதல் 7வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா இன்று ஜனவரி காலை 7 மணிக்கு மாணவர்களின் கச்சேரியுடன் தொடங்கியது.

இந்த விழா ஜனவரி 4 தொடங்கி ஜனவரி 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நாதஸ்வரம், இசை கச்சேரி, பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், மேடை நாடகம், கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், ஹெரிடேஜ் நடைபயணம், சமையல் போட்டி, மயிலாப்பூர் வினாடி வினா, செஸ் போட்டி மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.

போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெறுகிறது.

விழா பற்றிய விவரங்களை இந்த இணையதளத்தில் www.mylaporefestival.in சென்று தெரிந்து கொள்ளலாம்.

அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

Verified by ExactMetrics