மயிலாப்பூர் எம்.எல்.ஏ. பி.எஸ்.பள்ளியைச் சுற்றியுள்ள விளையாட்டு மைதானத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி.

மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானம். இந்த மைதானம் ஒரு வழக்கின் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார் அப்போது எம்.எல்.ஏ வேலுவுடன் இந்த மைதானத்தையும் பார்வையிட்டுள்ளார். மேலும் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் பேசியதாகவும் அவர்கள் பள்ளி வேலைநாட்கள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் பயன்படுத்தி கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் எம்.எல்.ஏ தா.வேலு தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் சில வேலைகள் செய்து முன்பிருந்தது போன்று பொதுமக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், இந்த பிரச்சனை பற்றி அடுத்த வாரம் பி.எஸ்.பள்ளி நிர்வாகத்தினரிடம் திரும்ப பேசவுள்ளதாகவும் அதில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago