மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வின் 10 அம்ச விருப்பப் பட்டியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் இருந்தும் அவரவர் தொகுதியில் முன்னுரிமை மற்றும் அரசு நிறுவனங்களின் ஆதரவு தேவைப்படும் பணிகள் குறித்த பட்டியலை வழங்க அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு பட்டியலை வழங்கியுள்ளார்.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலுவின் விருப்பப் பட்டியல் இதோ.

1.மயிலாப்பூரில் பேருந்து நிலையம்.
2.அடையாறு கரை ஓரம் உள்நாட்டு மீனவர்கள் பயன்பெற மீன் அங்காடி மற்றும் வண்ண மீன்கள் காட்சியகம்.
3. சத்யா ஸ்டுடியோ ஆந்திர மகிளா சபா இடையே நடை மேடை.
4.மயிலாப்பூரில் P S மேல்நிலை பள்ளி மைதானத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தளம்.
5.மாடுகளை பராமரிக்க MRTS Railway பாலத்தின் கீழ் ஆய்வு செய்து இடம் ஒதுக்கீடு.
6.தொகுதியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உயர் கல்வி நுழைவு தேர்வு, TNPSC தேர்வுகள் எழுத பயிற்சி மையம்.
7.தொகுதியியில் உள்ள 30க்கும் மேற்பட்ட அனைத்து மத பழமையான கோயில்கள் உள்ளதால் ஆன்மீக சுற்றுலா மையம் அமைத்தல்.
8.கடற்கரை ஓரம் உள்ள வீடுகள் கட்டும் திட்டத்தை துரித படுத்தல்.
9.அம்பேத்கார் பாலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த பகுதியில் வீடுகள் கட்டி தர வேண்டும்.
10.முண்டகண்ணியம்மன் கோயில் அருகில் உள்ள மாநகராட்சி காலி இடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து தரவேண்டும்.