ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக அமைதியாக காணப்பட்ட மயிலாப்பூர் கோவில்கள்.

கோவில் பகுதிகளில் இன்று பார்க்கக்கூடிய காட்சிகள், கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது போடப்பட்ட ஊரடங்கு நினைவுகளை மீட்டெடுக்கிறது, வெயில் அல்லது மழை என்று பாராமல் தினமும் கோயில்களுக்குச் செல்லும் மக்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் பார்க்க முடியவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாப்பூரில் உள்ள மூன்று கோயில்களில் மூன்றாவது அலை தொடர்பான முதல் முழு நாள் ஊரடங்கின் போது இதுபோன்ற காட்சிகள் இருந்தன.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் வெளியில் நின்று ஸ்ரீ கபாலீஸ்வரரர் கோவிலின் ராஜகோபுரத்தின் அருகே பிரார்த்தனை செய்தனர்.

ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கபாலீஸ்வரர், ஸ்ரீநிவாசப் பெருமாள், கேசவப் பெருமாள் கோவில்கள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால், இந்த மூன்று கோவில்களிலும் காலையில் நடைபெறும் வழக்கமான பூஜை நடத்துவதற்கு எப்பொழுதும் போல் பூசாரிகள் வந்திருந்தனர்.

செய்தி : எஸ்.பிரபு

Verified by ExactMetrics