மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மாணவர்களுக்கு ரூ.2,92,500 நிதியுதவி வழங்கியுள்ளது. நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) கடந்த மூன்று வாரங்களாக ரூ.2,92,500 நிதியுதவி அளித்துள்ளது.

இந்தத் தொகை ஆறு உள்ளூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  அவர்களில் பெரும்பாலோர் பிளஸ் டூ படிக்கின்றனர், சிலர் கல்லூரி சேர்க்கையைப் பெற்றுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை ஆதரவளித்து வரும் பள்ளியான ஆர். ஏ. புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 குழந்தைகளுக்கு இரண்டு செட் பள்ளி சீருடைகளுக்கான நிதியையும் அறக்கட்டளை வழங்கியது.

அடுத்த இரண்டு வாரங்களில், இளங்கலைப் படிப்புகளில் சேர உதவி தேவைப்படும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

இதற்கு மயிலாப்பூர்வாசிகளின் நன்கொடை தேவை. மயிலாப்பூர் டைம்ஸின் மேலாளர் சாந்தியை 2498 2244 என்ற எண்ணில் அழைத்து உங்கள் நன்கொடையை வழங்கலாம். நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு சேர்க்கை பெற்ற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம். இந்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும்.

Verified by ExactMetrics