மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த செய்திகள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் மூலம் வந்தது. இவர்கள் தினமும் கோவிட் சம்பந்தமான வேலைகளை செய்வதற்கு அனைத்து பகுதிகளுக்கும் செல்வர். உதவிகள் சில இடங்களில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சில இடங்களில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டுவருகிறது. ஏற்கனெவே பட்டினப்பாக்கம் பகுதியில் கோவிட் கேர் பணியாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை மூன்று குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று கோவிட் கேர் பணியாளர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர். வெளியில் சாப்பிடுவதற்கும் கடைகள் ஏதும் இல்லை. கடந்த வருடம் மாநகராட்சி காலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கியதாகவும் ஆனால் தற்போது புதிய ஒப்பந்தத்தில் பட்ஜெட் பற்றாக்குறையால் இவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவிட் கேர் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.ஏ புரம், எம்.ஆர்.சி. நகர், கே.வி.பி கார்டன் போன்ற பகுதிகளில் சுமார் 112 ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் காமராஜ் சாலை பூங்காவில் தினமும் ஒன்று கூடுகின்றனர். இவர்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092