ஆழ்வார்பேட்டையில் நாதஸ்வரம், தவில் இசை விழா.

இந்த பொங்கல் சீசனில் பிரம்ம கான சபா நடத்தும் இசை விழாவில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசையில் சிறந்த சில ஜாம்பவான்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஜனவரி 14 முதல் 22 வரை தினமும் மாலை 4.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த இசை நிகழ்ச்சிகளுக்கு அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

இடம் : ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.